மயிலாடுதுறையில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.30 கோடி கடனுதவி

மயிலாடுதுறையில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.30 கோடி கடனுதவி
X

மயிலாடுதுறையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கலெக்டர் லலிதா கடனுதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.30 கோடி கடனுதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரம் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா 834 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 11 ஆயிரத்து 548 உறுப்பினர்களுக்கு ரூ. 30 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள், மற்றும் நலத்திட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியின் காணொலி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஊரகவளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், மகளிர்திட்டம் இணை இயக்குனர் கவிதபிரியா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி