/* */

அம்பேத்கர் படம் பிரச்சினை தொடர்பாக பெண்கள் கருப்பு கொடி போராட்டம்

மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் படம் பிரச்சினை தொடர்பாக பெண்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அம்பேத்கர் படம் பிரச்சினை தொடர்பாக பெண்கள் கருப்பு கொடி போராட்டம்
X

மயிலாடுதுறை அருகே பெண்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் மணல்மேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது திருவுருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்த காவல்துறையினரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். காவல் நிலையத்தில் அனுமதி மறுத்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் இப்பிரச்சனை தொடர்பாக இருதரப்பினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது. இதைடுத்து இன்று கோட்டாட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருந்தனர்.

இதற்கு பட்டவர்த்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலதரப்பு மக்கள் வசிக்கும் தங்கள் பகுதியில் அம்பேத்கர் பிறந்த தினத்தில் கோவில் திருவிழா நடைபெறவுள்ளதால், நிகழ்ச்சியில் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொள்ளவுள்ளதால் தேவையற்ற கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று கூறி கருப்புக்கொடி ஏந்தி ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜாதி கலவரத்தை தூண்டும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் பட்டவர்த்தி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினர் மற்றும் மற்ற சாதியினர் அம்பேத்கர் படம் வைத்தால் கண்டிப்பாக கலவரம் ஏற்படும். எனவே பிரச்சனை ஏற்படாத வகையில் அரசே அம்பேத்கர் படத்தை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.


Updated On: 1 April 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!