மயிலாடுதுறை அருகே சொத்துக்காக பெரியம்மா கடத்தப்பட்டதாக பெண் புகார்
கலெக்டரிடம் புகார் அளிக்க வந்த பெண்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ராதாநல்லூரை சேர்ந்தவர் மரகதம்(51). இவர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில், தன்னுடைய பெரியப்பா சாமிக்கண்ணு, பெரியம்மா தையல்நாயகி தம்பதியருக்கு குழந்தையில்லை என்றும் இதனால் அவர்கள் தன்னை வளர்ப்பு மகளாக பாவித்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வந்ததனர். தனது பெரியப்பா சாமிக்கண்ணு இறந்தபோது அவருக்கான இறுதி சடங்குகளை மரகதமே செய்த நிலையில், தனது பராமரிப்பில் இருந்த தனது பெரியம்மா தையல்நாயகியை அவரது அக்கா பேரன் சீர்காழி கூத்தியம்பேட்டையை சேர்ந்த மதியழகன் என்பவர் சொத்திற்காக அவரது உறவினர் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடத்தி மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை ஊருக்குள் வரக்கூடாது என்று மிரட்டுவதாகவும், சொத்திற்காக கடத்தி வைக்கப்பட்டுள்ள தனது பெரியம்மா தையல்நாயகி உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu