சீர்காழியில் பிடிபட்ட அரிய வகை ஆந்தை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் இன்றளவும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன் என்பதை அறியாது மக்களால் பேசப்படுகிறது. உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புள்ளி ஆந்தை, கூகை அல்லது வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை என மூன்று வகை ஆந்தைகள் காணப்படுகிறது.
புள்ளி ஆந்தை சாலையோர மரங்கள், மாந்தோப்புகள், பாழடைந்த கட்டிடங்களில் வாழும் இயல்புடையது. நகர்ப்புறம் சார்ந்தும் வாழும். தனக்கென வாழ்விட எல்லையை ஏற்படுத்திக் கொள்ளும். வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது. கூகை அல்லது வெண்ணாந்தைதான் "ஆஸ்திரேலிய ஆந்தை" கூகைகள் மட்டுமல்ல, பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் காணப்படும். வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரிவதை அறியாமல், மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழலை சமநிலையுடன் பாதுகாப்பதில் ஆந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலை நாடுகளில் ஆந்தைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. நாமும் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பழைமை கருத்துகள், பக்தியின் பேரால் நிலவும் மூடநம்பிக்கைகளை ஆகியவற்றை அகற்றிவிட்டு, அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மட்டுமே ஆந்தைகளின் வாழ்க்கையும், நமது வாழ்க்கையும் சிறக்கும். இல்லை என்றால், எதிர்காலச் சந்ததிகள் பாடம் செய்யப்பட்ட அவற்றின் உடலை மட்டுமே பார்க்கக் கூடிய நிலை உருவாகலாம்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் வாசல் பகுதியில் அரியவகை வெள்ளை நிற ஆஸ்திரேலியன் ஆந்தை ஒன்று அமர்ந்து இருப்பதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் உடனே சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த வனத்துறையினர் அரிய வகை ஆந்தையை மீட்டு சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துவந்து இரவு பாதுகாப்பாக பறக்க விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu