மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு நடைப்பயிற்சி: மாவட்ட எஸ்பி பங்கேற்பு

மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு நடைப்பயிற்சி: மாவட்ட எஸ்பி  பங்கேற்பு
X

மயிலாடுதுறையில்  மன அழுத்தத்தைப் போக்கு வகையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட  போலீஸார்

மயிலாடுதுறை, செம்பனர்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட 7 காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்

மயிலாடுதுறையில் காவல்துறையினரின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் நடைப்பயிற்சி மற்றும் உடல்திறன் பயிற்சி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நடைப்பயிற்சி மற்றும் உடல்திறன் பயிற்சி நடைபெற்றது. டிஇஎல்சி தேவாலய வளாகத்தில் துவங்கி பல்வேறு வீதிகளில் பேரணியாக போலீசார் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டனர். இதில் மயிலாடுதுறை, செம்பனர்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட 7 காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர். தொடர்ந்து போலீசார் உடல்திறன் பயிற்சி மேற்கொண்டனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story
ai healthcare products