சீர்காழியில் விஷ்ணு சகஸ்ரநாமம் மகாமந்திரம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி

சீர்காழியில் விஷ்ணு சகஸ்ரநாமம் மகாமந்திரம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி
X

சீர்காழியில் மகா மந்திரம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

சீர்காழியில் விஸ்வாஸ் சத்சங்கம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் மகாமந்திரம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

மகாபாரதத்தில் பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்ததே ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். ஸ்ரீதேவி,பூதேவி சமேத விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.அதன்படி சீர்காழியில் பக்தர்கள் ஒன்றிணைந்து சகஸ்ரநாமம் பாராயணம் நடந்தது.

முன்னதாக திருஇந்தளூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவி,பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.தொடர்ந்து சகஸ்ரநாமம் முற்றோதல் தொடங்கியது. டாக்டர்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.லயன்ஸ் சங்கம் முன்னாள் ஆளுனர் கியான்சந்த் முன்னிலை வகித்தார்.

விஸ்வாஸ் நிறுவனர் சென்னை ஸ்ரீதரன்,நிர்வாக இயக்குனர்கள் கிருஷ்ணன்,டிஎஸ்.சிவராமகிருஷ்ணன்,டாக்டர் வி.இராமபத்திரன்,டாக்டர்.கோதண்டராமன்,கிரிஜா,சுஜாதா,சீனிவாசன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்று மந்திரங்களை பாராயணம் செய்தனர்.ஏற்பாடுகளை சீர்காழி விஸ்வாஸ் சங்க அமைப்பாளர்கள் எம்.சியாமளா,சௌமியா,விஜயலெட்சுமி செய்திருந்தனர்.முன்னதாக ஆசிரியர் சௌந்தரபாண்டியன் வரவேற்றார்.நிறைவில் அமைப்பாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!