மயிலாடுதுறை மாவட்டம் விசலூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் விசலூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டம் விசலூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விசலூரில் கிராம நியாய விலை கடைக்கு என புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையிலும் அங்கு நியாய விலை கடை செயல்படாமல் சேந்தமங்கலத்தில் உள்ள பழைய தனியார் இடத்திலேயே செயல்பட்டு வருகிறது.

இதனால் விசலூர் கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று பொருள்கள் பெற முடியாத நிலை உள்ளது. மேலும் நியாய விலை கடைக்கென்று புதிய கட்டிடம் விசலூரில் கட்டப்பட்டு திறக்கப்பட்டும் அந்த கட்டிடத்தில் செயல்படாமல் சேந்தமங்கலத்தில் தனியார் இடத்தில் நியாய விலை கடை செயல்படுவதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் விசலூர் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று சங்கரன்பந்தல் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர்களிடம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ai in future agriculture