மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள  241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளில் இன்று மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஒன்றியத்தில் பட்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள 500 கூரை வீடுகளை தொகுப்பு வீடுகளாக மாற்றி தர வேண்டும் என்றும், மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் 200 குடும்பங்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவது என்றும், மன்னம்பந்தல் ஊராட்சியில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு என். பி. எச். எச். கார்டுகளை பி. எச். எச். கார்டுகளாக மாற்றி தர வலியுறுத்தியும், குளிச்சாறு ஊராட்சியில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள ஊராட்சி அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் நல்லத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் பங்கேற்று கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!