மயிலாடுதுறை அருகே வேல் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே வேல் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
X

வேல் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே வேல் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமம் பட்டவர்த்தி சாலையில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ வேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கி மகா பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து யாக சாலையை சுற்றி வந்து விமானத்தை அடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேல் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்