சீர்காழியில் பட்டா மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

சீர்காழியில் பட்டா மாற்றம் செய்ய ஐந்தாயிரம் ரூபாய்  லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
X

 சீர்காழி அருகே லஞ்சம் வாங்கியதாக கைதான விஏஓ செந்தில்நாதன்

அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜிடம் பட்டா மாற்றம் செய்ய கேட்ட லஞ்ச பணத்தை வாங்கியபோது கைது செய்யப்பட்டார்

சீர்காழியில் பட்டா மாற்றம் செய்ய ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ ஊழல் தடுப்பு கண்காணிப்புப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் செம்பதனிருப்பு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவரிடம் பட்டா மாறுதல் செய்வதற்காக அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அணுகியபோது, பட்டா மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபாய் ஐந்தாயிரம் பணத்தில் ரசாயனப் பொடி தூவி செல்வராஜிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து செல்வராஜ் , செந்தில்நாதனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, தான் சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற செல்வராஜ், தான் எடுத்து சென்ற ரசாயனப் பொடி தடவிய பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து, செந்திநாதனிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வழக்கு பதிவு செய்து, நாகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!