குத்தாலம் அருகே ஸ்ரீ வன்மீகர் நாத சுவாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்

குத்தாலம் அருகே ஸ்ரீ வன்மீகர் நாத சுவாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்
X
குத்தாலம் அருகே உள்ள இலக்கியம் ஸ்ரீ வன்மீகர் நாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
குத்தாலம் அருகே இலக்கியம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வன்மீகர் நாத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா இலக்கியம் கிராமத்தில் பழைமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ வன்மீகர் நாதஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது. பழைமையான இந்த ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் ,இன்று நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 6ம்;தேதி விக்னேஷ்வர அனுக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மஹா பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பட்டாச்சாரியார்கள் கடத்தை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!