வைத்தீஸ்வரன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வைத்தீஸ்வரன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் துவங்கியது.

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு தையல் நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திருதேரோட்டம் துவங்கியது. அடுத்தடுத்து நான்கு தேர்களை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் முருகப்பெருமான் செல்வமுத்துக்குமாரசாமியாக தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சித்தமருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி தனிச் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். இக்கோவிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் திருச்சாந்துருண்டை என்னும் பிரசாதத்தை உண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.இவ்வளவு சிறப்பு மிக்க கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

7 ஆம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் விழா தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. விநாயகர்,செல்வ முத்துக்குமார சுவாமி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட நான்கு தேர்தல் அடுத்தடுத்து நிலையில் இருந்து புறப்பட்டு வீதியுலா சென்றது. திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் படித்து துவக்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 4 தேர் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.

Tags

Next Story