வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கறி விருந்து
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை இரண்டாவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை , புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர். வைத்தீஸ்வரன் கோவிலில் பல லட்சம் பக்தர்கள் வந்து சென்றதால் கோவில் மற்றும் நான்கு வீதிகள் ,பிரதான சாலைகளில் அதிக அளவு நெகிழிப் பைகள் உள்ளிட்ட அதிக குப்பைகள் சேர்ந்திருந்தது .
மலைபோல் குவிந்த குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் ஒரே நாளில் சுத்தம் செய்து நான்கு வீதிகளிலும் பிளிச்சிங் பவுடர் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் சிறப்பாக தூய்மை பணி மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், அலுவலர்களை கவுரவிக்கும் வகையில் தி.மு.க.வை சேர்ந்த பேரூராட்சி தலைவர் பூங்கொடி மற்றும் அவரது கணவர் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர் ஆகியோர் தங்களது இல்லத்திற்கு அழைத்து கறி உணவு சமைத்து விருந்து வைத்தனர் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu