மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா
மயிலாடுதுறை திருஇந்தளூரில் புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது ஆலயமும், பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமுமான ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 13ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு பகல்பத்து முதல்நாள் நிகழ்ச்சி இன்று துவங்கியது. பெருமாள் சர்வ அலங்காரத்தில் மகாலட்சுமி பதக்கம் மார்பில் அணிந்து மரகத கிரீடம் தாங்கி உள் பிரகார வீதியில் எழுந்தருளினார். தொடர்ந்து திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. அதனையடுத்து படி ஏற்ற சேவை நடைபெற்றது.
ஆலயத்தில் ஒவ்வொரு படிக்கும் 4தமிழ் பாசுரங்களை பாடினர். ஒவ்வொரு படியாக பெருமாளை பல்லக்கில் தாலாட்டுவது போல் தாலாட்டி ஐந்து படிகள் கடந்து கர்ப்பகிரகத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu