கொரோனா குறைந்து வரும் சூழலில் தடுப்பூசி, சமூக இடைவெளி அவசியம்: ஜெ. ராதாகிருஷ்ணன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் நடந்த மெகா பூஸ்டர் தடுப்பூசி ஊசி முகாமைஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் தடுப்பூசி, சமூக இடைவெளி மற்றும் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் இருபத்தி ஒன்றாவது மெகா பூஸ்டர் தடுப்பூசி ஊசி முகாம் நடைபெற்றது. இதனை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளிடம் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் 21 வது கொரோனா பூஸ்டர் ஊசி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது, இதுவரைக்கும் நடைபெற்ற இலக்கு 7 கோடியே 91 லட்சத்து 889 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த டோஸ் 9.67 கோடி தவணை போடப்பட்டுள்ளது.18 வயதுக்கு மேற்பட்டோர் 5 கோடியே 25 லட்சமும் ,இரண்டாவது டோஸ் 4.05 கோடியும், முதல் தவணை 90.75 விழுக்காடும்,இரண்டாவது தவணை 70.02 விழுக்காடும்,இதுவரைக்கும் 70 விழுக்காட்டை தாண்டி உள்ளோம்.
ஒட்டுமொத்தமும் 9.67 கோடி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது. மேழும் மயிலாடுதுறை,ராணிபேட்டை,தென்காசி போன்ற சில மாவட்டங்களில் இன்னமும் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் உள்ளது. இது பேரிடர் காலம் என்பதால், உலகளவில் தடுப்பூசி போட்டததால் தான் மூன்றாம் அலையில் இறப்பை கணிசமாக குறைய தொடங்கி உள்ளது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உலக அளவில் மக்கள் படுக்கை வசதி, பிராணவாயு வசதி இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் 1.35 லட்சம் படுக்கையறைகள் இருக்கும் நிலையிவ் 4 விழுக்காடு நோய் தொற்று உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
பொதுமக்கள் கட்டாய தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் இந்திய அளவில் ஏறுமுகமாக இருந்த கொரோனா தொற்று தற்பொழுது இறங்குமுகமாக இருப்பதற்கு அனைத்து மக்களும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதே காரணம். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2,000 வீதம் தொற்று குறைந்து வருகிறது. இதை பலர் கிண்டலாகவும் பேசி வருகின்றனர். தேர்தலுக்காக குறைவதாக கூறிவருகின்றனர். ஆனால் முக்கிய காரணம் பொதுமக்கள் மாஸ்க், சமூக இடைவெளி, தடுப்பூசி செலுத்தி கொண்டதுதான் என்றார் ஜெ.ராதாகிருஷணன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu