நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மயிலாடுதுறையில் பாமகவினர் விருப்ப மனு அளிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மயிலாடுதுறையில் பாமகவினர் விருப்ப மனு அளிப்பு
X

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம். நகராட்சித் தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு.

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம். நகராட்சித் தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் கமல்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு, கட்சி வளர்ச்சி மற்றும் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்தாலோசித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, நகர மன்ற தேர்தலில் போட்டியிட பாமகவை சார்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் பழனிசாமியிடம் விருப்ப மனு அளித்தனர். இதில் பாமக மூத்த நிர்வாகிகள் காமராஜ், அன்பழகன், கணேசன், விமல், காசிபாஸ்கரன் மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!