நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு: மயிலாடுதுறையில் போலீஸார் கொடி அணிவகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு:  மயிலாடுதுறையில் போலீஸார் கொடி  அணிவகுப்பு
X

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு

தேர்தலில் பாதுகாப்பாக வாக்களிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றவாளிகளை எச்சரிக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகளும், தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய நான்கு பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து துவங்கியது. காவல் நிலைய சாலை, காந்திஜி சாலை, கச்சேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக போலீசாரின் கொடி அணிவகுப்பு சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பில் மயிலாடுதுறை உப கோட்டத்தில் உள்ள 7 காவல் நிலையங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகள் சிறப்பு காவல் படையினர், கமாண்டோ படையினர், காவலர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பில் பங்குபெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!