சீர்காழி அருகே உப்பனாற்றின் கரை உடைந்து விளைநிலங்களில் நீர் புகுந்தது

சீர்காழி அருகே உப்பனாற்றின் கரை உடைந்து விளைநிலங்களில் நீர் புகுந்தது
X

சீர்காழி அருகே உப்பனாறு உடைப்பால் வயல்களில் தண்ணீர் புகுந்தது.

சீர்காழி அருகே உப்பனாற்றின் கரை உடைந்து விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர்கள் மூழ்கின.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த நான்கு தினங்களாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சீர்காழி, கொள்ளிடம் வட்டாரப் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீர்காழியை அடுத்த திருக்கருக்காவூர் கிராமத்தில் உப்பனாற்றில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்தது.இதனால் நேரடி விதைப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.ஏற்கனவே அடுத்தடுத்து இப்பகுதியில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட பயிர்களை மூன்றாவது முறையாக விவசாயிகள் மருந்து தெளித்தும் அடிஉரம் இட்டும் பயிரை காத்து வந்தனர்.

இந்நிலையில் உப்பனாறு கரை உடைந்து மழைநீருடன் கடல்நீரும் சேர்ந்து உட்புகுந்து சம்பா பயிர் முற்றிலும் மூழ்கியதால் இனிபயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.மேலும் மறுகணக்கெடுப்பு செய்யவும் இடுபொருள் மானியத்திற்கு பதிலாக ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் உப்பனாற்றின் கரைகளை பலப்படுத்தி கிடப்பில் போடபட்ட தடுப்பணை பணியை துவங்கவும் வலியுறுத்தினர்.

Tags

Next Story
ராசிபுரம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர் கட்டளை..!