உப்பனாற்று பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

உப்பனாற்று பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
X

உப்பனாறு பாலம்.

மயிலாடுதுறை மாவட்டம் உப்பனாற்று பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான 10 கடலோர கிராமங்களையும் திருமுல்லைலவாசல் அருகே உள்ள உப்பனாற்றின் மறுகரையில் அமைந்துள்ள கீழமூவர்கரை முதல் தரங்கம்பாடி வரையிலான 16 மீனவ கிராமங்களையும் இணைக்கும் வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு உப்பனாற்றில் 31 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டது.

அனைத்து கட்டுமான பணிகள் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பாலத்திற்கு இருபுறமும் இணைப்புசாலை அமைக்கப்படாமல் பாலம் பயனற்று அந்தரத்தில் நிற்கிறது. இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் கடற்கரையோர கிராமமக்கள் ஆற்றின் மறுபக்கம் அமைந்துள்ள கிராமங்களுக்கு செல்ல 10 கி.மீ வரை சுற்றி செல்கின்றனர்.

அதே போல் நாகப்பட்டினம் ,காரைக்கால் செல்ல 20 கி.மீ தூரம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது.பாலத்திற்கான இணைப்புசாலை அமைக்க இடம் கையகபடுத்தும் பணிகள் முடிவடைந்தும் பல ஆண்டுகளாக சாலை அமைக்க தாமதம் ஆவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மீனவர்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமமக்களும் பொருட் செலவாலும் ,நேரவிரையத்தாலும் பாதிக்கபட்டு வருகின்றனர்.

எனவே திருமுல்லைவாசல்- கீழமூவர்கரை இடையேயான உப்பனாற்று பாலத்திற்கு விரைந்து இணைப்புச் சாலை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருமுல்லைவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
best ai for small business