மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில்  திமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பாக பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்ற பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வடக்கு திமுக ஒன்றியத்தின் சார்பாக பொது உறுப்பினர் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக பொது உறுப்பினர் கூட்டம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் வடக்கு ஒன்றியத்தில் கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பையன் தலைமையில் செம்பனார் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி. எம் .அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியதாவது: வருகின்ற 31 தேதி முதல்வர் வருகை குறித்தும் அடுத்த மாதம் 3 -ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!