செம்பனார்கோவில், குத்தாலம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு

செம்பனார்கோவில், குத்தாலம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
X

செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இடைத்தேர்தலில் வென்ற மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில், குத்தாலம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

செம்பனார்கோவில் ஒன்றியம் காட்டுச்சேரி 30-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் செல்வம் பதவியேற்பு நிகழ்ச்சி செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் காட்டுச்சேரி 30 -வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினராக செ.செல்வம் கையெழுத்து இட்டு பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு காட்டுச்சேரி ஒன்றிய குழு உறுப்பினர் செல்வத்தை வாழ்த்திப் பேசினார்.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, திருமலை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோன்று குத்தாலம் ஒன்றியம் 15-வது வார்டு தத்தங்குடி ஒன்றியக் குழு உறுப்பினர் ராக்கெட் ரமேஷ் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் முன்னிலையில் ஒன்றியக்குழு உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிகளில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் சி.என். ரவி, ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக் அன்பழகன் மங்கை சங்கர், முருகப்பா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள், கழகப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future of ai in retail