கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
X

பூம்புகார் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை பகுதியில் கண்ணகி சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் விஏஓ.,வுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த விஏஓ, மணிமாறன் சடலம் குறித்து கடலோர காவல் படைக்கு புகார் அளித்தார். அதன் பேரில் 55 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட கடலோர காவல் படையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இறந்தவரின் முகத்தில் பலமான இரத்த காயங்கள் உள்ளதால் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி