மயிலாடுதுறை அருகே உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் உள்ளே அமர்ந்தபடியே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் கடலூர் மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் திடீரென பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, திமுகவினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உதயநிதியின் பேச்சை கேட்பதற்காக குத்தாலம் கடை வீதியில் கூடினர். மதியம் 2 மணி அளவில் குத்தாலத்திற்கு வந்த உதயநிதி பிரச்சார வாகனத்தில் உள்ளே அமர்ந்தபடியே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு இரண்டு நிமிடங்கள் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சட்டமன்றத் தேர்தல் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தின்போது காவல்துறையால் இதே இடத்தில் என்னை கைது செய்து இப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். அதன்பின் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தோம்.
தற்போது உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். தஞ்சை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தற்போது குத்தாலம் வந்துள்ளேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை உங்களிடம் ஒப்படைத்து உள்ளார். தேர்தலுக்கு முன்பு ஒன்பது நாட்களில் தீவிர பிரச்சாரம் செய்து முதலமைச்சர் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu