உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
X

மயிலாடுதுறையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை காவிரி நகர் 30 ஆவது வார்டு ஆரோக்கியநாதபுரம் பகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 1000 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் - மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திரனின் மகன் தம்பி விஜயேந்திரன் ஏற்பாடு செய்தார்.

இநிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் இமய நாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பிஎம் ஸ்ரீதர் மற்றும் தி.மு.க. பிரமுகர்களும் -பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!