மயிலாடுதுறை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி
X

செம்பனார் கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை அருகே செம்பனார் செம்பனார் கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கொக்கரக்கோ சௌமியன் ஏற்பாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மாபெரும் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.கண்ணன், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் கார்த்திகேயன் வேலுசாமி, நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், அப்துல் மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai powered agriculture