உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 500 குடும்பத்தினருக்கு நிவாரணம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 500 குடும்பத்தினருக்கு நிவாரணம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 500 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சி, அரங்கக்குடியில் உள்ள ஒய்.எம்.ஹெச். திருமண மண்டபத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது. இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணமும், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள், மரக்கன்றுகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் வழங்கி துவக்கி வைத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும், மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான எஸ்.எம்.சம்சுதீன் செய்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி .என். ரவி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஹேப்பி அர்சத் அப்துல்மாலிக்,

மயிலாடுதுறை மாவட்ட, ஒன்றிய அவைத்தலைவர் சுப்பையன், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story