மயிலாதுறை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க.வினர் ரத்த தானம்

மயிலாதுறை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க.வினர் ரத்த தானம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க.வினர் ரத்த தானம் செய்தனர்.

மயிலாதுறை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க.வினர் ரத்த தானம் செய்தனர்.

தி.மு.க.இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கைநல்லூர் கடைவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் செய்திருந்த நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ரவி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமாமகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகப்பா, தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இம்முகாமில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!