உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: ரத்த தானம் வழங்கி கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: ரத்த தானம் வழங்கி கொண்டாட்டம்
X

மயிலாடுதுறையில்  உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தி.மு.க.வினர் ரத்த தானம் வழங்கி கொண்டாடினர்.

மயிலாடுதுறையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை அ.தி.மு.க.வினர் ரத்த தானம் வழங்கி கொண்டாடினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்தநாள் விழாவை பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர். தனது பிறந்தநாளில் விளம்பர பேனர் வைப்பது போன்ற ஆடம்பர செலவுகளை செய்யாமல் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குமாறு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்ததால் மயிலாடுதுறைஅறிஞர் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தி.மு.க. நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது .இம்முகாமில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

இம்முகாமில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி , ஒன்றிய செயலாளர் இமயநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால.அருட்செல்வன், ஜெகவீரபாண்டியன் மற்றும் தி.மு.க. கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தன்னார்வத்துடன் ரத்த தானம் அளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!