சீர்காழி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு
தொழிற்சாலை விபத்து பற்றி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேரடி விசாரணை நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று காலை நீராவி பாய்லர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.இவ்விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்ஓரன்,பல்ஜித்ஓரன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.ரகுபதி,மாரிதாஸ்,ஜாவித் ஆகிய மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் ரகுபதி ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆய்வு செய்தனர்.அப்போது மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் நேரில் விசாரனை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து விபத்து குறித்து விரிவான அறிக்கை அரசுக்கு அனுப்பியுள்ளோம்.மேலும் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறால் தீவன தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும் எனவும், அதுவரை தொழிற்சாலை இயங்க தற்காலிக தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu