/* */

குத்தாலத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இருவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குத்தாலத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இருவர் கைது
X

மயிலாடுதுறை அருகே ஆட்டோ திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்தலிப் (35). இவர் கடந்த 14-ஆம் தேதி இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஆட்டோ மாயமானது குறித்து முத்தலிப் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமைக் காவலர்கள் நரசிம்மபாரதி உள்ளிட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தை சேர்ந்த அலாவுதீன் (31)., நன்னிலம் தாலுகா ஆதலையூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திக் (31) ஆகிய இருவரும் ஆட்டோவை திருடிச் சென்று திருச்சியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அலாவுதீன், சித்திக் இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்கள் திருடி விற்பனை செய்த ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 30 Jan 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  6. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  7. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  9. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  10. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...