மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் சுவாமிகள் கடைமுக தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் சுவாமிகள்  கடைமுக தீர்த்தவாரி
X

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மும்மூர்த்திகள் தீர்த்தவாரி கண்டருள வந்தனர்.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் சுவாமிகள் கடைமுக தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொண்டதாக ஐதீகம். அதுவும் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் அனைத்து புண்ணிய நதிகளும் சங்கமமாகும் என்பதால் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி பிரசித்தி பெற்றது.

கடந்த 7ம்தேதி மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் துவங்கிய 10நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி இன்று நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணத்தால் வழக்கம்போல் உள்ளூர் விடுமுறை இந்த ஆண்டும் அரசு அறிவிக்கவில்லை.

காவிரி கரையின் இரண்டு கரைகளிலும் பக்தர்கள் இன்று காலைமுதல் புனித நீராடி வருகின்றனர். ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பக்தர்கள் பெரும்பாலும் இரண்டு கரையில் உள்ள படித்துறையில் இருந்தவாறே புனித நீராடிவருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!