மயிலாடுதுறை காவிரி ஆறு துலாக்கட்ட விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை நகரம் காவிரி கரையில் அமைந்த ஒரு பழமையான நகரம் ஆகும். இங்கு பாடல் பெற்ற சிவாலயங்கள் மற்றும் வைணவ ஆலயங்கள் அமைந்துள்ளன. மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் காசிக்கு இணையாக 7 விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான காவிரி துலா கட்ட விசுவநாதர் ஆலய கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் கடந்த 25ம்தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இன்று காலை பூர்ணாகுதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து விசுவநாதர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், துழாவூர் ஆதீனம், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu