பாவம் போக்க மயிலாடுதுறை துலா கட்டக் காவிரியில் பக்தர்கள் புனித நீராடல்
வருடம் முழுவதும் பக்தர்களது பாவங்களை போக்கிவரும் கங்கை தனது புனித தன்மையை இழந்த நேரத்தில் தன் பாவங்களை போக்குவதற்கு இறைவனை வேண்டியபொழுது, மாயூரம் சென்று அங்கே செல்லும் காவிரியில் நீராடினால் உன் பாவங்கள் அனைத்தும்போகும் என்றார் இறைவன். இறைவனது வாக்கினை ஏற்று கங்கையானவள் மயிலாடுதுறை சென்று ஐப்பசி மாதத்தில் மாயூரம் துலாக்கட்டக் காவிரியில் இறங்கி புனித நீராடி தனது பாவங்களை போக்கிக்கொண்டதாகவும் அவருடன் அனைத்து புண்ணிய நதிகளும் மாயூரம் துலாக்கட்டக் காவிரியில் இறங்கி புனித நீராடியதாக ஐதீகம்.
இங்கே பக்தர்கள் புனித நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை
வருடந்தோறும் ஐப்பசி முதல் நாளில் காவிரியில் பக்தர்கள் புனித நீராட ஆரம்பித்து ஐப்பசி இறுதிநாளில் கடைமுழுக்கு விழாவாக நிறைவு செய்வது வாடிக்கை.கடைமுழுக்கு அன்று உள்ளூர் விடுமுறை விடப்படும். தமிழகத்தில் காவிரி ஆறு ஓடும் இடங்களில் எல்லாம் பக்தர்கள் புனித நீராடினாலும் மயிலாடுதுறை துலாக்கட்டக்காவிரியில் புனிதநீராடுவது சிறப்பு .
மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்திலிருந்து தினந்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று துலாக்கட்டக் காவிரியில் புனித நீராடி தீர்த்தவாரி நடைபெறுவது வாடிக்கை. சென்னை போன்ற பல்வேறு நகரங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu