சுனாமி குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க கோரிக்கை

சுனாமி குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க கோரிக்கை
X

சுனாமி குடியிருப்பில் உள்ள பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.

சுனாமி குடியிருப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

சுனாமி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இரண்டு தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கபட்டது.இதனால் சுனாமி குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வந்தது.இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அடுத்தடுத்து செயலிழந்தது.

அவ்வப்போது பேரூராட்சி நிர்வாகம் பழுபார்த்தும் சுத்திகரிப்பு நிலையம் தொடந்து இயங்காத நிலைக்கு சென்றது. இதனால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுனாமி குடியிருப்புக்கு குடிநீர் வழங்கபட்டு வருகிறது.ஆனால் இந்த குடிநீரும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வழங்கப்படுவதாலும் பள்ளமான பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் வருவதாலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் தண்ணீரை குடங்களில் சேகரித்து வைத்தே பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கவலை தெரிவித்த மீனவர்கள் சுனாமி குடியிருப்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்ளை சீரமைத்து இயக்கவும்,கூடுதல் குடிநீர் குழாய்கள் அமைக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!