மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயண பாதுகாப்பு விதிமுறைகள்: விழிப்புணர்வு நாடகம்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து ரயில் பயணத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் ரயில்வே பாதுகாப்பு கவுன்சிலர் மாங்குடி முன்னிலையில் ரயில்வே காவல் ஆய்வாளர் சாந்தி, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் தனசேகர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரயில்வே பாதுகாப்பு படை காவலர் குழுவினர் ரயில் பயணத்தின்போது அவசியமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவது, ரயிலில் எதிர்பாராதவிதமாக நடுவழியில் நிற்கும் போது ரயிலை விட்டு இறங்குவது, ரயில்வே இருப்புப் பாதையில் நடப்பது, பெரும் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லுவது, ரயிலில் பயணம் செய்யும் பொழுது மற்ற பயணிகளிடம் இருந்து பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை வாங்குவது, ரயில் ஓடுபாதையில் நின்று செல்பி எடுப்பது ஆகியவற்றின் அபாயம் குறித்து ரயில் பயணிகளுக்கு சைகை வெளிப்பாடு மூலம் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இதனை ரயில் பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டு பயனடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu