மயிலாடுதுறை அருகே மணல்மேடு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதம்

மயிலாடுதுறை அருகே மணல்மேடு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதம்
X

தீயில் எரிந்து சேதம் அடைந்த மின்மாற்றி.

மயிலாடுதுறை அருகே மணல்மேடு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் எரிந்து சேதம் அடைந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மின்சார வாரிய துணை மின்நிலையத்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 10 மெகாவாட் பவர் டிரான்ஸ்பார்ம் பயங்கர வெடி சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை, மணல்மேட்டில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் கிளம்பி சென்று போராடி தீயை அணைத்தனர்.

திருச்சி, நாகை, திருவாரூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மின்பராமரிப்பு சிறப்பு குழுவினர் மாற்று ஏற்பாடு செய்து 7 மணி நேரத்துக்குப் பின்னர் மின்சாரம் வழங்கினர். மணல்மேடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அதிக அளவு விவசாயம் சார்ந்த பகுதிகளாக இருப்பதால், தற்போது எரிந்து சேதமடைந்துள்ள 10 மெகாவாட் டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக 16 மெகாவாட் டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products