நாளை முதல் ஊரடங்கு: மயிலாடுதுறையில் மக்கள் நெரிசல்

நாளை முதல் ஊரடங்கு:  மயிலாடுதுறையில் மக்கள் நெரிசல்
X

மயிலாடுதுறையில் மக்கள் நெரிசல்

நாளை முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு என்பதால் மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசல். பாதுகாப்பு பணியில் போலீசார்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளையிலிருந்து வருகின்ற 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சனிக்கிழமை அன்றும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட ஞாயிற்றுக்கிழமையான இன்றும் 2 நாட்களுக்கு அனைத்துகடைகளையும் திறக்க அனுமதியளித்தது.

நாளையிலிருந்து அத்தியாவசிய கடைகள் மட்டும் காலையிலிருந்து மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அனைத்து கடைகளும் மயிலாடுதுறை நகரில் திறக்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். ஜவுளிக்கடைகளில் அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் காணப்பட்டது.

பெரிய கடை வீதி வண்டிக்கார தெரு பேருந்து நிலைய பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!