வர்த்தகர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

வர்த்தகர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: ஆட்சியர்  உத்தரவு
X

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் லலிதா

மயிலாடுதுறையில வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும்

மயிலாடுதுறையில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் ஆக.31-க்குள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் 31.08.2021க்குள் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட அனைத்து வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வின்போது வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான உரிய ஆவணத்தை காண்பிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ளாமல் வர்த்தக நிறுவனங்களில் ஊழியர்கள் பணிபுரிவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்