மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தொழிற்சங்கத்தினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மத்திய அரசை ‌கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் பொது வேலைநிறுத்தம்: மயிலாடுதுறையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:

நாடு முழுவதும் இரண்டாவது நாளாக மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், எல்ஐசி உள்ளிட்ட பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தொழிற்சங்கத்தினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மத்திய அரசை ‌கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story