மயிலாடுதுறையில் 4-ம் தலைமுறையாக கொலு பொம்மை உருவாக்கும் கலைக்குடும்பம்
மயிலாதுறையில் கலைக்குடும்பம் தயாரித்த நவராத்திரி கொலு பொம்மைகள்.
மயிலாடுதுறையில் மூன்று தலைமுறையாக குடிசைதொழிலாக செய்யப்பட்டு வந்த கொலு பொம்மைகள் உற்பத்தி தொழிலை நான்காம் தலைமுறை பட்டதாரி இளைஞரான ஆனந்தகுமார் விரிவுபடுத்தி அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இவர், தான் தயாரிக்கும் கொலு பொம்மைகள், மண் சிற்பங்கள் ஆகியவற்றை தமிழகம் மட்டுமின்றி கேரளா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறார்.
நவராத்திரியையொட்டி இந்தாண்டு இவர் தயாரித்துள்ள விவசாய செட் பொம்மைகள் அமோகமாக விற்பனை ஆகி வருகின்றது. மேலும், கிருஷ்ண பெருமானின் தசாவதாரம் பொம்மைகள், கடவுள், தேசத் தலைவர்கள், விலங்கு, பறவைகளின் பொம்மைகள், உடற்பயிற்சியின் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்தும் வகையில் மாவு அரைத்தல், துணி துவைத்தல், அம்மி அரைத்தல், உலக்கை இடித்தல் போன்ற பொம்மைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மண் பானையில் தொங்கும் மின்விளக்கு போன்ற புதுமையான கொலு பொம்மைகளில் புதுவரவுகள் அமோக விற்பனையாகி வருகிறது. கடந்த 20 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை ஆகாமல் இருந்த கொலு பொம்மைகள், தற்போது அரசு தளர்வுகளை அறிவித்ததால் விற்பனை சூடு பிடித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu