தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் பல்லக்கு உற்சவம்:கொடியேற்றத்துடன் தொடக்கம்
தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா பட்டணப் பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் விழாவின் முக்கிய நிகழ்வான 18-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 20-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும், 21-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
22ஆம் தேதி தருமபுரம் ஆதினம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பல்லக்கில் பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இப்பெருவிழாவின் கொடியேற்றம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுர ஆதீனகர்த்தர் முன்னிலையில், திருவிழாவின் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. பாரம்பரியமாக நடந்து வரும் பட்டணப் பிரவேச விழாவை நடத்த நிகழாண்டில் விதிக்கப்பட்ட தடை பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து இவ்விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu