சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

சீர்காழியில் ரூ. 3 லட்சம்  மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் கைதானவர் மற்றும் போலீசார் உள்ளனர்.

சீர்காழியில் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வந்தது.இதனையடுத்து தனிப்படை போலீசார் சீர்காழி நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. மேலும் புகையிலை பொருட்களை அருகே உள்ள கடையில் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சீர்காழி திருக்கோலக்கா தெரு மளிகை கடையில் சோதனையிட்டனர்.

அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 9200 பாக்கெட் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அதனை விற்பனை செய்த கஜேந்திரன் என்பவரை கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய கடை உரிமையாளர் வினோத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்