சிறுமியிடம் சில்மிஷம், டியூசன் ஆசிரியரை தேடுது போலீஸ்

மயிலாடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் டியூசன் ஆசிரியர் ஈடுபட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் தேடிவருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த 11 வயது சிறுமி. அவ்வழியாக சென்ற ஒருவர் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்ற சிறுமியிடம் வீட்டில் அம்மா, அப்பா இல்லையா என்று பேச்சு கொடுத்தவாறே பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற அந்த நபர் வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தார்.

பின்னர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். சிறுமி பயத்தில் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் சிறுமியின் வீட்டை நோக்கி வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட அந்த நபர் தப்பியோடினார். இதைப் பார்த்த அப்பகுதியினர் தொலை பேசிமூலம் குழந்தைகள் நல மையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து, நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என்பது தெரியவந்தது.

தரங்கம்பாடி தாலுக்கா பிள்ளைபெருமாநல்லுரை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் என்பதும் தற்காலிக ஆசிரியராக பணியாற்றியவர். தற்போது டியூசன் வகுப்பு நடத்தி வருவதும் தெரியவந்தது. தெரிந்தது

இதுகுறித்து, ஆரோக்கியராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டியூசன் வாத்தியார் கண்ணன் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள ஆசிரியர் கண்ணனை தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!