மயிலாடுதுறையில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில்  தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேலம் மாவட்டம் வீரகனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த முத்துவேல் என்பவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி வெட்டிய காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், முத்துவேல் படுகொலைக்கு நீதி கேட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு முத்துவேல் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று கண்டன முழக்கமிட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!