திருக்களாச்சேரி ஜமாத் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதி ரூ.5 லட்சம் வழங்கல்

திருக்களாச்சேரி ஜமாத் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதி ரூ.5 லட்சம் வழங்கல்
X

மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி ஜமாத் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை எம்எல்ஏ நிவேதா முருகனிடம் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி ஜமாத் சார்பில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை எம்எல்ஏ நிவேதா முருகனிடம் ஜமாத் நிர்வாகிகள் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக குறைக்க பொது மக்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று பல்வேறு தரப்பினரும் கொரோனா நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் மூலமாகவும், மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவும் நேரடியாகவும் வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்களாச்சேரி பள்ளிவாசலில் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை சார்பில் ரூ 5 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை பூம்புகார் எம்எல்ஏவும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதாமுருகனிடம் திருக்களாச்சேரி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகசபை சார்பில் . நிர்வாக சபை தலைவர் முகமது ரபிக் தலைமையில் ஜமாத்தினர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம். சித்திக், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!