குப்பை மேடாக காட்சியளிக்கும் திருவாலங்காடு நீர்தேக்கம்: நோய் பரவும் அபாயம்

குப்பை மேடாக காட்சியளிக்கும் திருவாலங்காடு நீர்தேக்கம்: நோய் பரவும் அபாயம்
X
குத்தாலம் அருகே திருவாலங்காடு, காவிரி நீர் தேக்கம் அருகே குப்பைகளை கொட்டுவதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம்.

குத்தாலம் அருகே திருவாலங்காடு, காவிரி நீர் தேக்கம் அருகே குப்பைகளை கொட்டுவதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம்:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சிக்கு வரும் காவிரி நீரில் முதல் கதவணை நீர்தேக்கம் திருவாலங்காடு கிராமத்தில் உள்ளது. இந்த காவிரி நீரை நம்பியே மயிலாடுதுறை மாவட்டத்தில் 70 ஆயிரம் ஹெக்டரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திருவாடுதுறை ஊராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளையும் துப்பரவு பணியாளர்களே கடந்த 1 வருடங்களுக்கு மேலாக இந்த காவிரி ஆற்றங்கரையில் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பை அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. அதில் உள்ள கழிவுகளை திண்பதற்கு பன்றிகளும் அங்கு திரிகின்றது. அருகில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவ்வழியே செல்வோர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகத்தினர், அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன் அங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!