மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி பொங்கல் வாழ்த்து செய்தி

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி பொங்கல் வாழ்த்து செய்தி
X

பொங்கல் மலர் வெளியிட்டார் திருவாவடுதுறை ஆதீனம்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி பொங்கல் வாழ்த்து செய்தி வௌியிட்டு உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் பொங்கல் மலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் எழுதிய பொங்கல் சிறப்பு மலரை திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட அரசு தலைமை கொறடா கோவி செழியன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீனம் மடாதிபதி உறவுக்கும் உணவுக்கு பயன்படும் மாடுகளுக்கும் நன்றி சொல்லும் திருநாளாக அறுவடை நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் திருநாளில் பொதுமக்கள் மத்தியில் இருக்கின்ற வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமைகள் ஏற்பட்டு அதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். மனித பிறவி உயர்ந்த பிறவி மனிதனாய் பிறந்த நாம் மற்றவர்களுக்கு உதவுவதில் இன்பம் காண வேண்டும். அதற்கு இந்த பொங்கல் திருநாள் அனைவரது இல்லத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!