திருக்குவளை மரகதலிங்கத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்:தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்
திருக்குவளை மரகதலிங்கத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலை தடுப்பு டிஐஜி, இந்த லிங்கம் திருக்குவளை ஆலயத்திற்கு சொந்தமானது என்பதை தங்களிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டதாகவும், இந்த லிங்கத்தை தங்களிடம் ஒப்படைத்து நித்திய பூஜைக்கு வழிவகை செய்யவேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பொன்னி ஐபிஎஸ், கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோர் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்தனர். அப்போது போலீசார் தாங்கள் கொண்டு வந்திருந்த மரகத லிங்கத்தின் புகைப்படத்தை தருமபுரம் ஆதீன மடத்தில் உள்ள தொலைந்து போன மரகத லிங்கத்தின் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்து கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்து விரைவில் சிலையை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu