தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் சீரமைக்கப்படும் என கலெக்டர் தகவல்
தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு கலெக்டர் லலிதா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் மிக முக்கிய பங்காற்றியவர் தில்லையாடி வள்ளியம்மை. சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர் என்று மகாத்மா காந்தி பெருமிதத்துடன் கூறினார். பெருமை படைத்த தில்லையாடி வள்ளியம்மையின் ஊரை பார்ப்பதற்காக தமிழகம் வந்திருந்த மகாத்மா காந்தியடிகள் 1915 -ஆம் ஆண்டு அவர் தில்லையாடியில் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு நினைவு ஸ்தூபி கட்டப்பட்டுள்ளது.
அதற்கு அருகே தில்லையாடி வள்ளியம்மைக்கு மணிமண்டபம் மார்பளவு சிலை மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள் ஆகியவைகள் இடம் பெற்றுள்ளது. இந்த கட்டிடம் தற்போது பழமை காரணமாக சீரமைக்க வேண்டிய நிலைமையில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஞாயிற்றுக்கிழமை தில்லையாடி வள்ளியம்மை மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக வள்ளியம்மையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் விரைவில் புதுப்பொலிவுடன் தில்லையாடி வள்ளியம்மையின் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றார்.
இவ்வாய்வின் போது செம்பனார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன், தில்லையாடி ஊராட்சி மன்றத்தலைவர் ரங்கராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கார்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu