பரிமள ரெங்கநாதர் கோயில் வெள்ளிச்சட்டம் திருட்டு: 2 அர்ச்சகர்கள் கைது

மயிலாடுதுறையில், திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது. இங்கு, உற்சவ மூர்த்தியை தூக்கி செல்ல பயன்படும் "படிச்சட்டம் " தோளுக்குகினியாள் என்றழைக்கப்படும். இது மரத்தினால் செய்யப்பட்டு மேலே வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்டு இருக்கும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளி தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு களவாடப்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.
மாறாக, புதியதாக படிச்சட்டம் ஒன்று வெள்ளி தகடுகளுடன் செய்து, பழையது போன்றே கோயிலில் வைக்க, அதை திருடியவர்களால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், சிலை தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த மனுவின் மீது பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு மனுவில் சொல்லியுள்ளதுபடி வெள்ளி தகடுகள் உரிக்கப்பட்டு களவு போய்யுள்ளது உண்மை எனத் தெரியவந்தது.
இவ்வழக்கில் ஸ்ரீநிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை விசாரணை செய்ததில் இவர்கள் படிச்சட்டத்தில் வெள்ளி தகடுகளை உரித்து திருடியது தெரியவந்தது. பழைய படிச்சட்டத்தை போன்றே வெள்ளி தகடுகள் பதித்து புதியதாக படிச்சட்டம் செய்ய, மயிலாடுதுறையில் உள்ள ஜீவல்லரியில் பழைய படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கி வெள்ளிகட்டிகளை கொடுத்தும், மேலும் போதாததற்கு நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க செய்தும் உள்ளது தெரியவந்தது.
இந்த இருவரையும் கைது செய்து அவர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, ஜீவல்லரியில் புதிதாக செய்யப்பட்ட புதிய படிச்சட்ட வெள்ளி உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அர்ச்சகர்கள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும் புதியதாக செய்யப்பட்ட படிச்சட்டத்திற்கு வெள்ளி உருப்படிகள் 15 கிலோ எடையில் வெள்ளியால் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu